நீதித்துறை குறித்த சோனியாவின் விமர்சனம் தவறானது: மாநிலங்களவை தலைவர் குற்றச்சாட்டு

நீதித்துறை குறித்த சோனியாவின் விமர்சனம் தவறானத என்று மாநிலங்களவை தலைவர் குற்றம் சாட்டினார்.

Update: 2022-12-22 18:54 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டின் நீதித்துறையை சட்டத்துக்கு புறம்பாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதற்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நேற்று அவர் மாநிலங்களவையில் கூறுகையில், 'நீதித்துறை குறித்த சோனியாவின் கணிப்புகள் மிகவும் தவறானவை. இது ஜனநாயகத்தில் நம்பிக்கையின்மையைக் குறிக்கிறது. இதனால் இந்த விதிவிலக்கான பதிலைத் தவிர்க்க முடியாது' என தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவரின் இந்த கருத்து தனது கருத்து பிரதிபலிப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதாக கூறிய தன்கர், நீதித்துறையை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

நீதித்துறை என்பது ஜனநாயகத்தின் தூண் என்றும், இத்தகைய உயர் அரசியலமைப்பு நிறுவனங்களை பக்கசார்பு நிலைப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்