வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்திய மருத்துவக் கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை வித்தியாசமாக நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-04-02 19:28 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்கப்படுவதில்லை எனக் கூறி டாக்டர்கள் குழு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், "இந்திய மருத்துவக் கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை வித்தியாசமாக நடத்த முடியாது. வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவர்களின் இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். உதவித்தொகை வழங்குவது குறித்த முந்தைய உத்தரவை நிறைவேற்றாவிட்டால், கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்