பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட முயற்சி: நிதிஷ்குமாருடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்-உடன் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.
பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட முயற்சி: நிதிஷ்குமாருடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
Published on

பாட்னா,

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் மே.வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி முயற்சி செய்து வருகிறார். அதேபோல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

பீகாரில், முதல்-மந்திரியாக இருந்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் பாட்னா சென்ற, சந்திரசேகர ராவ், நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். மதிய உணவு அருந்திய இருவரும் தொடர்ந்து மத்திய, மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததுடன், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், துணை முதல்-மந்திரியும் தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com