பூட்டிய வீட்டின் கதவை உடைத்துரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

குந்துகோலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update:2022-07-17 20:17 IST

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஹிரேஹரகுனி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள், லட்சுமி வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் மர்மநபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் லட்சுமி, வீட்டிற்கு திரும்பி வந்தார்.

வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்து அதில் இருந்த 40 கிராம் தங்கநகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். அப்போது தான் அவர் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றதை உணர்ந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்