கூட்ட நெரிசலை தவிர்க்க பம்பையில் பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப முடிவு

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பம்பையில் பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க பம்பையில் பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப முடிவு
Published on

சபரிமலை,

சபரிமலையில் இன்று (திங்கட்கிழமை) தரிசனத்திற்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 260 பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் சன்னிதான போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் நாயக் கூறுகையில், 'கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குழுக்கள், குழுக்களாக மலை ஏற அனுப்பி வைக்கப்படுவார்கள். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீண்ட நேரம் காத்து நிற்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க அவ்வப்போது சுக்கு நீர் உள்ளிட்டவை வழங்க அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை குறைக்க சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக மலையிறங்க வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com