மதுரா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் சாவு

பீகாரி கோவிலில் நேற்று அதிகாலை கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-08-20 19:28 GMT

மதுரா, 

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிரசித்தி பெற்ற பாங்கே பீகாரி கோவிலில் நேற்று அதிகாலை கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.

அதன் 'மங்கள ஆரத்தி' நிகழ்வில் பங்கேற்று வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி, ஒரு 55 வயது பெண்ணும், 65 வயது முதியவர் ஒருவரும் மூச்சுத் திணறி பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்