ரெயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென வந்த ரெயில்... நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த நபர்..!
உத்தரப்பிரதேசத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷாவுடன் ரயில்வே கேட்டை கடந்த நபர், நொடிப்பொழுதில் உயிர்பிழைத்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.;
image screengrab for video tweeted by @ANI
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ரெயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ரெயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென ரெயில் வந்தது.
அதிவேகமாக வந்த அந்த ரெயில், ரிக்ஷாவின் முன்பகுதியை இடித்து தூக்கி எரிந்தது. ரிக்ஷாவை இழுத்து வந்த நபரும் அருகில் தூக்கிவீசப்பட்டார்.
நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த அந்த நபர், உடனடியாக எழுந்து, தூக்கிவீசப்பட்ட தனது ரிக்ஷா வண்டியை நோக்கி நடந்து சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மூடப்பட்டிருந்த ரெயில்வே கேட்டின் வழியாக குனிந்து சென்ற அந்த நபர், ரெயில் வருவதையும் கவனிக்காமல் செய்ததால், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதை காட்டுகிறது.
#WATCH | Narrow escape for a rickshaw puller while crossing a railway track in Uttar Pradesh's Aligarh. (09.09) pic.twitter.com/Tb49XcaXcc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 11, 2022
மூடப்பட்டிருக்கும் ரெயில்வே கேட்டை கடப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்திருந்தும் மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கிறது.