டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்

டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 7-ந் தேதி தொடங்கி, நவம்பர் 14-ந் தேதி நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7-ந் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலித்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

டெல்லியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com