13 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை

அாயலூர் மாவட்டத்தில் 13 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.
13 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். இதனை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 100 தனியார் பள்ளிகளில் தா.பழூர் பகுதியில் காரைக்குறிச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளி, நகர் பகுதி மற்றும் சீனிவாசபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி, பிள்ளையார் குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி உள்பட 13 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படவில்லை. 87 பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com