காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது
Published on

கொலை

காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை சத்யா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்று பூபாலன் உயிரிழந்தார்.

கைது

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய காஞ்சீபுரம் தாலுகா போலீசார் காஞ்சீபுரம் நாகலூத்துமேடு மந்தைவெளிபகுதியை சேர்ந்த செல்வம் (23), சரவணன் (21) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com