

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கல்வராயன்மலை சேராப்பட்டு அருகில் சீவாத்து மூலை என்ற இடத்தில் வேகமாக வந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மடக்கி சோதனை செய்தபோது 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அஜித்(வயது 22), குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த தோலன் மகன் பூபதி(32) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மினி லாரி, இருசக்கரவாகனம் மற்றும் 400 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.