அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து விருது மண்டலத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகர் மண்டலத்தில் உள்ள ராஜபாளையத்துக்கு 1,000 டன், அருப்புக்கோட்டைக்கு 1,000 டன் என மொத்தம் 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 156 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் விருது நகர் மண்டலத்துக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com