அரவைக்காக 2,000 டன் நெல்

தஞ்சையில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2,000 டன் நெல்
Published on

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com