புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்

புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்.
புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்
Published on

சேலம்,

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில் ரங்கசாமி சேலத்தில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவிலில் நேற்று அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது ரங்கசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், அமைச்சர் பட்டியலையும் வைத்து சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கேள்வி: புதுவையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்பு விழா எப்போது?

பதில்: 7-ந் தேதி (நாளை) பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

கேள்வி: பா.ஜனதா கட்சி சார்பில் 3 அமைச்சர் பதவி கேட்பதாக கூறப்படுகிறதே?

பதில்: அது மாதிரி எதுவும் இ்ல்லை.

கேள்வி: துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா?

பதில்: புதுவையில் இதுவரை அப்படி இல்லை. மத்திய அரசு கூறினால் பரிசீலிப்போம். தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com