ஒடிசாவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் 2 பேர் கைது

ஒடிசாவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-07-10 12:54 IST

சென்னை கோடம்பாக்கம், கிண்டி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கஞ்சா கடத்தல் ஆசாமிகள் இருவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீநிபாஸ் பாலகா (வயது 21). இன்னொருவர் பெயர் சானுபேக்சிங் (23). இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்