மது விற்ற 41 பேர் கைது

மது விற்ற 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 41 பேர் கைது
Published on

மிலாது நபியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்தவேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com