6 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

நெல்லை மாநகர பகுதியில் 6 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
6 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
Published on

நெல்லை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தாத வணிக நிறுவனங்கள், வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத 6 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com