பெல் ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

ராணிப்பேட்டையில் பெல் ஊழியர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.;

Update:2023-07-10 23:39 IST

ராணிப்பேட்டை சீக்கராஜபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மகேஸ்வரன் (வது 38). பெல் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதியன்று சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்