பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்

சுரண்டை அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு ராஜபாண்டி, கழுநீர்குளம், பட்டமுடையார்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து தனியார் வேன் மூலம் தினமும் குழந்தைகளை ஏற்றிச் செல்வது வழக்கம். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. பட்டமுடையார்புரம்- கழுநீர்குளம் செல்லும் வழியில் சரகிடங்கு என்ற பகுதி அருகே வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த 2 குழந்தைகள் லேசான காயம் அடைந்தனர். மற்ற குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு அவரவர் வீடுகளுக்கு மாற்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com