மது விற்ற 6 பேர் கைது

Update:2023-07-05 01:00 IST

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்றுகாலை வரை போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது அருந்திவிட்டு போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்கள் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்