காரிமங்கலம் அருகேதொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

காரிமங்கலம் அருகேதொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த செவத்தான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், மணி ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பணம் கொடுக்கல் தொடர்பாக மாதேஷ், மணி ஆகியோர் மணிவேலுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் 2 பேரும் சேர்ந்து மணிவேலை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் மாதேஷ், மணி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com