அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது

அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது
Published on

அரூர்:

அரூரில் உள்ள தில்லை நகர், மேல் பாட்ஷா பேட்டை, கீழ் பாட்ஷா பேட்டை, முருகன் கோவில் தெரு, சுடுகாடு மேடு உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், சரக்கு வாகனங்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என 31 வாகனங்களின் கண்ணாடிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு வாலிபர் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கார் கண்ணாடிகளை சேதப்படுத்திய அரூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சிங்காரவேலன் (வயது 23) என்பவரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com