ராசிபுரம் அருகே கல்லூரி விடுதியில் பீகார் மாணவர் தற்கொலை

ராசிபுரம் அருகே கல்லூரி விடுதியில் பீகார் மாணவர் தற்கொலை
Published on

பீகார் மாநிலத்தை சேர்ந்த துர்கா சிங் என்பவரது மகன் சச்சின்குமார் (வயது 22). இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் வகுப்பு முடிந்து மதிய உணவு அருந்த விடுதிக்குச் சென்ற மாணவர் சச்சின்குமார், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com