சேலத்தில் பஸ்சில் ஏறிய முதியவரை தாக்கிய டிரைவர் பணி இடைநீக்கம்

சேலத்தில் பஸ்சில் ஏறிய முதியவரை தாக்கிய டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2022-07-16 02:09 IST

சேலம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்குட்பட்ட அரசு பஸ் ஒன்று கடந்த 13-ந் தேதி சேலம் பழைய பஸ் நிலையத்துக்குள் வந்து கொண்டிருந்தது. மெதுவாக வந்த பஸ்சில் அங்கிருந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் வேகமாக சென்று ஏறினார். அப்போது அவர் தடுமாறியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்து ஆத்திரமடைந்த பஸ்சின் டிரைவர் முரளிகிருஷ்ணா அந்த முதியவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் தாக்கினார். முதியவரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதியவரை தாக்கிய பஸ் டிரைவர் முரளி கிருஷ்ணாவை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து கழக சேலம் கோட்ட பொது மேலாளர் லட்சுமணன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்