தொழிலாளியை தாக்கிய ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொழிலாளியை தாக்கிய ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
Published on

கண்டமனூர் அருகே புதுராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் இடையே குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சரண்யா தனது வீட்டிற்கு புதிதாக குடிநீர் குழாய் அமைத்தார். இதற்கு முத்துப்பாண்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சரண்யா, கண்டமனூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பாலமுருகனுக்கு (43) தகவல் தெரிவித்தார். அதன்படி, புதுராமச்சந்திராபுரத்திற்கு வந்த பாலமுருகன், சரண்யாவுடன் சேர்ந்து முத்துப்பாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முத்துப்பாண்டி, கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலமுருகன், சரண்யா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com