தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்திப்பு..!

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்திப்பு..!
Published on

சென்னை,

2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெற்றார்.

இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனாவை நியமித்து வெ.இறையன்பு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். கவர்னரின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக கவர்னர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்து பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com