சி.ஐ.டி.யு. மின் ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் சி.ஐ.டி.யு. மின் ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு. மின் ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசியில் சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய பஸ்நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் திட்ட துணை தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அயூப் கான் தொடக்க உரையாற்றினார். கடையநல்லூர் கோட்டச் செயலாளர் சேவியர் அந்தோணி, சங்கரன்கோவில் கோட்டச் செயலாளர் சிவராஜ், ஆலங்குளம் பகுதி செயலாளர் அய்யாதுரை, மாவட்ட பொருளாளர் நாகையன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினார்கள். மாநில செயலாளர் வண்ண முத்து நிறைவுரையாற்றினார். முடிவில் தென்காசி கோட்ட தலைவர் பட்டமுத்து நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com