வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டி

பெரணமல்லூரில் இந்தியன் வங்கி சார்பில் வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டி
Published on

சேத்துப்பட்டு

பெரணமல்லூரில் இந்தியன் வங்கி சார்பில் வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நெடுங்குணம் இந்தியன் வங்கி சார்பில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வங்கி நலத்திட்டங்கள் பற்றிய போட்டி நடந்தது.

இதில் 30 பள்ளிகளில் இருந்து 2 பேர் வீதம் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பெரணமல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி கிளை மேலாளர் மீனாட்சிசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வங்கியின் நல திட்டம் மற்றும் வங்கியில் வரவு செலவு கணக்கு, கடன் திட்டங்கள், புதிய கணக்கு தொடங்குவது போன்றவை குறித்து கேள்விகள் இடம் பெற்றன. இதற்காக வழங்கப்பட்ட கேள்வித்தாளில் மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர்.

இதில் 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெறும் ரிசர்வ் வங்கி மூலம் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என இந்தியன் வங்கி கிளை மேலாளர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com