

தொண்டி,
தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குறித்த பள்ளி மாணவி-மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில் பேச்சு, ஓவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு ஜவஹர் அலிகான் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.