நடவடிக்கை கோரி பா.ஜ.க.வினர் புகார் மனு
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது அவதூறு குறித்து நடவடிக்கை கோரி பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர்.;
கோவை பாரதீய ஜனதா மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு, மண்டல தலைவர் சபரி மற்றும் மகளிர் அணியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் குறித்து தி.மு.க. பிரமுகர் ஆவடி சுரேஷ் பெயரில் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் அவதூறாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பதிவிடப்பட்டு உள்ளது.
அமுதா என்ற பெயரிலும் டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது. இது பெண் உரிமைக்கு எதிரானது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.