தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு

ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு
Published on

ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.

முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் பேசும்போது, லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்பதோடு இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி என்ற நிலை இருக்காது. கோர்ட்டு கட்டணம் திருப்பி தரப்படும். எனவே, இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்வினை வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் பேசினால் தீர்வு ஏற்படும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் தங்களின் வழக்குகளை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தீர்த்துக் கொண்டு சமாதானமாக செல்லலாம் என்று பேசினார்.

24 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 24 வழக்குகள் எடுத்துக்கொண்டு சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டது. இதில் வக்கீல் சங்க செயலாளர் கருணாகரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com