விழுப்புரம் அருகேகாரில் கடத்திய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்2 பேர் கைது

விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, 2 பேரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகேகாரில் கடத்திய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்2 பேர் கைது
Published on

விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று மதியம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காருக்குள் 50 அட்டைப்பெட்டிகளில் 600 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏற்காம்பட்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிபாலன் (வயது 23), சேலம் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த முருகேசன் (49) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதனை தெடர்ந்து மணிபாலன், முருகேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com