

சூரமங்கலம்:
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22207) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் இரு மூன்றடுக்கு 'ஏ.சி.' பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் செல்லும் திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் வாரம் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22208) இரு மூன்றடுக்கு 'ஏ.சி.' பெட்டிகள் கூடுதலாக இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும், இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.