கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரே பலியான சிறுமி

சிலுவைபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.;

Update:2023-12-13 11:08 IST

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 3ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஜனுஷிகா, பள்ளிக்கு தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

சிலுவைபுரம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், தந்தை கண் எதிரே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்