எடப்பாடி, சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி, சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 20:00 GMT

எடப்பாடி

எடப்பாடி, சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி

சேலம் மாவட்டம் முருங்கபட்டி கிராமத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்தது. இதுதொடர்பாக அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த கண்ணன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதை கண்டித்தும், அவரை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும் எடப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் அப்புசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது வருவாய்த்துறையின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறுவது என்றும், இணையவழி மூலமாக பெறப்படும் விண்ணபங்களுக்கு பதில் அளிப்பது இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்ககிரி

சேலம் தாலுகா கொத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவரை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சங்ககிரி வட்ட கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்ட கிளை தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார குழு செயலாளர் முருகன், கோட்ட செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்