எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-07-07 00:15 IST

எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நாம்தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்த்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். எட்டயபுரம்-கோவில்பட்டி மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பாலாஜி, வக்கீல் பிரிவு செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எட்டயபுரம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்துசென்றனர்,

Tags:    

மேலும் செய்திகள்