இண்டூர் அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

இண்டூர் அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள குறிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாரம் வராததால் அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com