

திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் ஆனந்தனை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு கழக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே சீர்காழி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மாணவர் அணி அமைப்பாளர், கிளைக்கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்தனை திரளான கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.