வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்

வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயமடைந்தார்.
வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பன் (வயது 75). அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் நேற்று முன்தினம் மாலை கருப்பன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கருப்பன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com