குடும்பத்தகராறு:தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குடும்பத்தகராறு:தூக்குப்போட்டு பெண் தற்கொலை;

Update:2023-07-07 00:30 IST

கூடலூர்

கூடலூர் அத்திப்பாளி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பெள்ளி. இவரது மனைவி ராணி என்ற கேத்தி (வயது 46). இவர்கள் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.இதனால் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பெள்ளிக்கும், கேத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கேத்தி தூங்கச் சென்றார். நேற்று காலை 7 மணிக்கு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் தூக்கு போட்டு கேத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து கேத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்