காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயி நடைபயணம்

ஊழலற்ற இந்தியாவ வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயி நடைபயணம்
Published on

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் யாதவ் (வயது 25). விவசாயி. இவர், 'ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியா' என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு நடைபயணத்தை தொடங்கினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு திலீப் யாதவ் நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து, கரூர் நோக்கி அழகாபுரி வழியாக தேசியக்கொடியுடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திலீப் யாதவிடம் கேட்டபோது, ஊழலற்ற இந்தியா மாசு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக நான் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த பயணத்தின்போது கிராமங்கள், நகரங்கள் தோறும் பிரசாரம் செய்து வருகிறேன். தினமும் காலை முதல் இரவு வரை 25 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வேன். தமிழக மக்கள் எனக்கு உணவு மற்றும் பணம் கொடுத்து உதவி செய்கின்றனர். இந்த நடைபயணம் 120 நாட்களில் நிறைவு பெறும் என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com