இடப்பிரச்சினையில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

இடப்பிரச்சினையில் தந்தை, மகனுக்கு அரிவாள்‌ வெட்டு விழுந்தது.
இடப்பிரச்சினையில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு
Published on

அரியலூர் ஒன்றியம் புங்கன்குழி ஊராட்சி ஒரியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கைலாசம் மகன் முருகானந்தம்(வயது 43). இவர் நாகமங்கலத்தில் தங்கி தனியார் சிமெண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று முருகானந்தம் உறவினர் வீட்டு, காதணி விழாவில் கலந்து கொள்ள ஒரியூர் வந்தார். அப்போது இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் உள்ள பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வம்(55), அவர் மனைவி அஞ்சம்மாள், மகன் அஜித்(25) ஆகியோருக்கும், கைலாசத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித், கைலாசத்தை அரிவாளால் வெட்டினார். தடுக்க சென்ற முருகானந்தத்திற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த கைலாசம், முருகானந்தம் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அஜித், செல்வம், அஞ்சம்மாள் ஆகியோர் மீது தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com