பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு

பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
Published on

பரமத்திவேலூர்

பூக்கள் ஏல சந்தை

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, சம்பங்கி, செவ்வந்தி மற்றும் அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது.

இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.220-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com