

ஏரியூர்:
ஏரியூர் அருகே பெரும்பாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை மூலம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்வது குறித்து வணிகர்களிடையே விளக்கி கூறப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே, உணவு பண்டங்களை வாங்கும் பொழுது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், உணவின் தரம், காலாவதி தேதி, தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகளை பார்த்து வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பதிவு செய்த வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.