கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர், கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில் செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.