ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்
தூத்துக்குடியில் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன், துறைமுக சபை பால்ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.