வளவனூர் அருகேஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு2 பேருக்கு வலைவீச்சு

வளவனூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2022-12-23 00:15 IST

வளவனூர், 

திருச்சி மாவட்டம் ஒரையூரை அடுத்த கண்ணனூர்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் வேல்முருகன் (வயது 36). இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். இந்த பஸ், வளவனூரை அடுத்த ஆழாங்கால் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென கல்வீசி தாக்கி அந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பஸ் டிரைவர் வேல்முருகன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்