திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை துறை ஊழியர் தற்கொலை

திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை துறை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை துறை ஊழியர் தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே அகரம் கொத்தம்பட்டியை சேர்ந்தவர் பால்ரூபன் (வயது 53). இவர், திண்டுக்கல் நெடுஞ்சாலை துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். பால்ரூபனுக்கு மைதிலி செல்வமேரி (42) என்ற மனைவியும், லியோ கீர்த்தனன் (22) என்ற மகனும், அன்னபூரணி (18) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் மைதிலி செல்வமேரி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார். வீட்டிலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனைவி உடல்நலக்குறைவாக அவதியடைவதால் பால்ருபன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 1-ந்தேதி திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் இருந்து கொட்டப்பட்டி செல்லும் சாலையில் பால்ரூபன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ரூபன் நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குடும்ப சூழ்நிலையால் பால்ரூபன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com