போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

போடியை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவரது மனைவி ரம்யா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரம்யா கோபித்துக்கொண்டு போடி புதூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே கடந்த 5-ந்தேதி சதீஷ் குமார் போடிக்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்தி போடிக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில் கடந்த 8-ந்தேதி ரம்யா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் ரம்யாவின் தந்தை முருகேசன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com