தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி சந்தைரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக, தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அருண் சிவபாலகிருஷ்ணன் (வயது 25), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜேம்ஸ் மகன் அர்ஜூன் (27), தூத்துக்குடி தாமஸ்நகரைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோ மனோகர் மகன் ஜோசப் தினேஷ் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.